திருவருட்பா  90. திருக்குறிப்பு நாட்டம்

ஆற்றுக்  கேபிறைக்  கீற்றுக்  கேசடை 
ஆக்கிச்  சேவடி  தூக்கி  ஆருயிர்ப் 
பேற்றுக்கே  நடிப்பாய்  மணிமன்றில்  பெருந்தகையே 
சோற்றுக்  கேஇதஞ்  சொல்லிப்  பேதையர் 
சூழல்  வாய்த்துயர்  சூழ்ந்து  மேற்றிசைக் 
காற்றுக்கே  கறங்காய்ச்  சுழன்றேனைக்  கருதுதியோ. 
1
ஞாலத்  தார்தமைப்  போலத்  தாம்இங்கு 
நண்ணு  வார்நின்னை  எண்ணு  வார்மிகு 
சீலத்தார்  சிவமே  எவையும்எனத்  தேர்ந்தனரால் 
சாலத்  தான்கொடுஞ்  சாலத்  தாலத்தைத் 
தாவி  நான்பெரும்  பாவி  ஆயினன் 
ஏலத்தார்  குழலா  ளிடத்தாய்எனை  எண்ணுதியோ. 
2
அண்ண  லேநின்னை  எண்ண  லேன்என்னை 
ஆண்டு  கொண்டனை  மீண்டும்  விண்டனன் 
நண்ணலே  அறியேன்  கடையேன்சிறு  நாயனையேன் 
பெண்ண  லேன்இயல்  ஆண  லேன்அலிப் 
பேய  னேன்கொடும்  பேதை  யேன்பிழை 
கண்ணலே  புரியா  தினும்மீட்கக்  கருதுதியோ. 
3
வல்லி  ஆனந்த  வல்லி  சேர்மண 
வாள  னேஅரு  ளாள  னேமலை 
வில்லியாய்  நகைத்தே  புரம்வீழ்த்த  விடையவனே 
புல்லி  யான்புலைப்  போகம்  வேட்டுநின் 
பொன்ன  டித்துணைப்  போகம்  போக்கினேன் 
இல்லிஆர்  கடம்போ  லிருந்தேன்எனை  எண்ணுதியோ. 
4

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com