Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

அனைத்து 133 அதிகாரங்களும் All 133 chapters
1231

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிநறுமலர் நாணின கண்.

1232

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்.

1233

தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள்.

1234

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்.

1235

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுதொல்கவின் வாடிய தோள்.

1236

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்கொடியர் எனக்கூறல் நொந்து.

1237

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்பூசல் உரைத்து.

1238

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல்.

1239

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்.

1240

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேஒண்ணுதல் செய்தது கண்டு.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits