திருவருட்பா  72. பிரசாதப் பதிகம்

சரதத்  தால்அன்பர்  சார்ந்திடும்  நின்திரு 
விரதத்  தால்அன்றி  வேறொன்றில்  தீருமோ 
பரதத்  தாண்டவ  னேபரி  திப்புரி 
வரதத்  தாண்டவ  னேஇவ்வ  ருத்தமே. 
1
வேத  னேனும்வி  லக்குதற்  பாலனோ 
தீத  னேன்துயர்  தீர்க்கும்வ  யித்திய 
நாத  னேஉன்றன்  நல்லருள்  இல்லையேல் 
நோதல்  நேரும்வன்  நோயில்சி  றிதுமே. 
2
அருந்தி  னால்அன்ப  கங்குளிர்  ஆனந்த 
விருந்தி  னால்மகிழ்  வித்தருள்  அண்ணலே 
வருந்தி  நாடவ  ரும்பிணி  நின்அருள் 
மருந்தி  னால்அன்றி  மற்றொன்றில்  தீருமோ. 
3
மாலும்  நான்குவ  தனனும்  மாமறை 
நாலும்  நாடரு  நம்பர  னேஎவ 
ராலும்  நீக்கஅ  ரிதிவ்வ  ருத்தம்நின் 
ஏலும்  நல்லருள்  இன்றெனில்  சற்றுமே. 
4
தேவர்  ஆயினும்  தேவர்வ  ணங்கும்ஓர் 
மூவர்  ஆயினும்  முக்கண  நின்அருள் 
மேவு  றாதுவி  லக்கிடற்  பாலரோ 
ஓவு  றாதஉ  டற்பிணி  தன்னையே. 
5
வைய  நாயக  வானவர்  நாயக 
தையல்  நாயகி  சார்ந்திடும்  நாயக 
உய்ய  நின்னருள்  ஒன்றுவ  தில்லையேல் 
வெய்ய  நோய்கள்வி  லகுவ  தில்லையே. 
6
கல்லை  வில்லில்க  ணித்தருள்  செய்ததோர் 
எல்லை  இன்றிஎ  ழும்இன்ப  வெள்ளமே 
இல்லை  இல்லைநின்  இன்னருள்  இல்லையேல் 
தொல்லை  நோயின்தொ  டக்கது  நீங்கலே. 
7
நீதி  மாதவர்  நெஞ்சிடை  நின்றொளிர் 
சோதி  யேமுத்தொ  ழிலுடை  மூவர்க்கும் 
ஆதி  யேநின்அ  ருள்  ஒன்றும்  இல்லையேல் 
வாதி  யாநிற்கும்  வன்பிணி  யாவுமே. 
8
பத்தர்  நித்தம்ப  யில்பரி  திப்புரி 
உத்த  மப்பொரு  ளேஉன்அ  ருள்தனைப் 
பெத்தம்  அற்றிடப்  பெற்றவர்க்  கல்லது 
நித்தம்  உற்றநெ  டும்பிணி  நீங்குமோ. 
9
சைவ  சிற்குணர்  தம்முளம்  மன்னிய 
தெய்வ  தற்பர  னேசிவ  னேஇங்கு 
உய்வ  தற்குன்அ  ருள்ஒன்றும்  இல்லையேல் 
நைவ  தற்குந  ணுகுவ  நோய்களே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com