திருப்புகழ் · 1331பந்தப்பொற் பார (திருப்பூவணம்)pandhappoR bAra
திருப்புகழ் திருவிழா
பாடல் விளக்கம் · song explanation
வேசியர்களின் அழகில் மயக்கமுற்று வாழ்நாளையெல்லாம் வீணே இழந்தேன். என்னைக் காத்து அருள வேண்டும் பெருமாளே! சமணர்களுடன் திருஞானசம்பந்தர் வாது செய்து அதில் வெற்றி பெற்றார். அதனால் சமணர்கள் ஒருகோடிப் பேர் தாங்கள் முன்னமே நியமித்துக் கொண்டபடி கழுவேறித் தங்களை மாய்த்துக் கொண்டனர். இதனை,
"அங்கத்தைப் பாவை செய் தேயுயர் சங்கத்திற் றேர்தமி ழோதிட அண்டிக்கிட் டார்கழு வேறினர் ...... ஒருகோடி"
என்று அருணகிரிநாத சுவாமிகள் பாடியுள்ளார். இவ்வாறு சமணர்கள் கழுவேறிய இடம் "கழுவர்படைவீடு" என்று அழைக்கபட்டது. இப்பொழுது "கழுகேர்கடை" என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் திருப்பூவணத்திற்கு அருகே உள்ளது. இவ்வூர் திருவிளையாடற் புராணத்திலும் திருப்புகழிலும் திருப்பூவணத்துடன் இணைத்தே பாடப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் திருப்பூவணத்தில் 10 நாள் திருவிழாவில் கழுவேறுதல் 6 ஆம் நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுவதும் கருத்திற் கொள்ளவேண்டியதாய் உள்ளது.
