திருவருட்பா · 142விரைசேர் சடையாய்

விரைசேர் சடையாய் விடையாய் உடையாய்
விகிர்தா விபவா விமலா அமலா
வெஞ்சேர் பஞ்சார் நஞ்சார் கண்டா விம்பசி தம்பர னே.
1
அரைசே குருவே அமுதே சிவமே
அணியே மணியே அருளே பொருளே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
2
உருவே உயிரே உணர்வே உறவே
உரையே பொருளே ஒளியே வெளியே
ஒன்றே என்றே நன்றே தந்தாய் அம்பர நம்பர னே.
3
அருவே திருவே அறிவே செறிவே
அதுவே இதுவே அடியே முடியே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே.
4

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout