திருவருட்பா · 42நாள் அவத்து அலைசல்

இன்றிருந் தவரை நா€ளைஇவ் வுலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ
என்றிருந் தவத்தோர் அரற்றுகின் றனரால் ஏழையேன் உண்டுடுத் தவமே
சென்றிருந் துறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ
மன்றிருந் தோங்கும் மணிச்சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
1
தாவியே இயமன் தமர்வரும் அந்நாள் சம்புநின் திருவருள் அ€டையாப்
பாவியேன் செய்வ தென்என நெஞ்சம் ப€தைப€தைத் துருகுகின் றனன்காண்
கூவியே எனக்குன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய்வ€கை அறியேன்
வாவிஏர் பெறப்பூஞ் சோ€லைசூழ்ந் தோங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
2
நீரின்மேல் எழுதும் எழுத்தினும் வி€ரைந்து நி€லைபடா உடம்பி€னை ஓம்பிப்
பாரின்மேல் அ€லையும் பாவியேன் தனக்குப் பரிந்தருள் பாலியாய் என்னில்
காரின்மேல் வரல்போல் கடாமி€சை வரும்அக் காலன்வந் திடில்எது செய்வேன்
வாரின்மேல் வளரும் திருமு€லை ம€லையாள் மணாளனே ஒற்றியூர் வாழ்வே.
3
கருங்கணம் சூழக் கசியும்இவ் வுடலம் கருதும்இக் கணமிருந் ததுதான்
வருங்கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என்செய வல்லேன்
பெருங்கணம் சூழ வடவனத் தாடும் பித்தனே உத்தம தவத்தோர்
மருங்கண வுறநின் றரகர எனுஞ்சொல் வான்புகும் ஒற்றியூர் வாழ்வே.
4
கன்னியர் அளகக் காட்டி€டை உழன்ற கல்மனக் குரங்கினேன் த€னைநீ
அன்னியன் என்றே கழித்திடில் உனக்கிங் கார்சொல வல்லவர் ஐயா
என்னியல் அறியேன் நமன்தமர் வருநாள் என்செய்வேன் என்செய்வேன் அந்தோ
மன்னிய வன்னி மலர்ச்ச€டை மருந்தே வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
5
பசிக்குண வுழன்றுன் பாததா ம€ரை€யைப் பாடுதல் ஒழிந்துநீர்ப் பொறிபோல்
நசிக்கும்இவ்வுட€லை நம்பினேன் என்€னை நமன்தமர் வருத்தில்என்செய்கேன்
விசிக்கும்நல் அரவக்கச்சினோய் நினது மெய்அருள் அலதொன்றும் விரும்பேன்
வசிக்கும்நல் தவத்தோர்க் கருள்செயஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.
6
கான்றசோ றருந்தும் சுணங்கனின் பலநாள் கண்டபுன் சுகத்€தையே விரும்பும்
நான்றநெஞ் சகனேன் நமன்தமர் வருநாள் நாணுவ தன்றிஎன் செய்கேன்
சான்றவர் மதிக்கும் நின்திரு வருள்தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா
மான்தனிக் கரத்தெம் வள்ளலே என்€னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே.
7
மடிக்குறும் நீர்மேல் எழுத்தினுக் கிடவே €மைவடித் தெடுக்குநர் போல
நொடிக்குளே ம€றையும் உடம்பி€னை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால்
படிக்குளே மனத்தால் பரிவுறு கின்றேன் பாவியேன் தனக்கருள் புரியாய்
வடிக்குறும் தமிழ்கொண் டன்பருக் கருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
8
அங்€கையில் புண்போல் உலகவாழ் வ€னைத்தும் அழிதரக் கண்டுநெஞ் சயர்ந்தே
பங்கமுற் ற€லைவ தன்றிநின் கமல பாதத்€தைப் பற்றிலேன் அந்தோ
இங்கெ€னை நிகரும் ஏ€ழையார் எனக்குன் இன்னருள் எவ்வணம் அருள்வாய்
மங்€கையோர் பு€டைகொள் வள்ளலே அழியா வளங்கொளும் ஒற்றியூர் வாழ்வே.
9
கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்ணிலார் போல்கிடந் து€ழைக்கும்
குணத்தினில் கொடியேன் தனக்குநின் அருள்தான் கூடுவ தெவ்வணம் அறியேன்
பணத்தினில் பொலியும் பாம்ப€ரை ஆர்த்த பரமனே பிரமன்மால் அறியா
வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com