Sri Pamban Swamigal, composer of Kumaarasthavam

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியகுமாரஸ்த்தவம்

Kumaarasthavam

Raghul - Album Palanimalaiyanea

0:000:00
ஓம் ஷண்முக பதயே நமோ நம
ஓம் ஷண்மத பதயே நமோ நம
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம
ஓம் ஷட்கோண பதயே நமோ நம
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம
ஓம் நவநிதி பதயே நமோ நம
ஓம் சுபநிதி பதயே நமோ நம
ஓம் நரபதி பதயே நமோ நம
ஓம் ஸுரபதி பதயே நமோ நம
ஓம் நடச்சிவ பதயே நமோ நம
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம
ஓம் கவிராஜ பதயே நமோ நம
ஓம் தபராஜ பதயே நமோ நம
ஓம் இகபர பதயே நமோ நம
ஓம் புகழ்முனி பதயே நமோ நம
ஓம் ஜயஜய பதயே நமோ நம
ஓம் நயநய பதயே நமோ நம
ஓம் மஞ்சுள பதயே நமோ நம
ஓம் குஞ்சரீ பதயே நமோ நம
ஓம் வல்லீ பதயே நமோ நம
ஓம் மல்ல பதயே நமோ நம
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம
ஓம் இஷ்டி பதயே நமோ நம
ஓம் அபேத பதயே நமோ நம
ஓம் ஸுபோத பதயே நமோ நம
ஓம் வியூஹ பதயே நமோ நம
ஓம் மயூர பதயே நமோ நம
ஓம் பூத பதயே நமோ நம
ஓம் வேத பதயே நமோ நம
ஓம் புராண பதயே நமோ நம
ஓம் ப்ராண பதயே நமோ நம
ஓம் பக்த பதயே நமோ நம
ஓம் முக்த பதயே நமோ நம
ஓம் அகார பதயே நமோ நம
ஓம் உகார பதயே நமோ நம
ஓம் மகார பதயே நமோ நம
ஓம் விகாச பதயே நமோ நம
ஓம் ஆதி பதயே நமோ நம
ஓம் பூதி பதயே நமோ நம
ஓம் அமார பதயே நமோ நம
ஓம் குமார பதயே நமோ நம

பத உரை · word meanings

  • ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்
  • ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்
  • ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்
  • ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்
  • அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்
  • ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்
  • ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்
  • பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்
  • அரசர் தலைவனுக்கு வணக்கம்
  • தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்
  • நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்
  • ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்
  • கவியரசர் தலைவனுக்கு வணக்கம்
  • தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்
  • இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்
  • திருப்புரழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்
  • மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்
  • மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்
  • அழகுருவான தலைவனுக்கு வணக்கம்
  • தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்
  • வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்
  • மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்
  • கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்
  • கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்
  • சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்
  • வேள்வித் தலைவனுக்கு வணக்கம்
  • வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்
  • மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்
  • சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்
  • மயூர நாதனுக்கு வணக்கம்
  • பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்
  • வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்
  • புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்
  • ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்
  • அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்
  • பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்
  • அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
  • உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்
  • மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைனுக்கு வணக்கம்
  • எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்
  • எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்
  • சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்
  • மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்
  • குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com